Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொது இடங்களின் தூய்மையைப் பேணுவதில் சிங்கப்பூரர்கள் முன்னேற்றம்

பொது இடங்களின் தூய்மையைப் பேணுவதில், சிங்கப்பூரர்கள் முன்னைக் காட்டிலும் இப்போது மேம்பட்ட சமூக உணர்வுடன் நடந்துகொள்கின்றனர்.

வாசிப்புநேரம் -

பொது இடங்களின் தூய்மையைப் பேணுவதில், சிங்கப்பூரர்கள் முன்னைக் காட்டிலும் இப்போது மேம்பட்ட சமூக உணர்வுடன் நடந்துகொள்கின்றனர்.

பொது இடங்களின் தூய்மை குறித்து சுமார் 2,000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்தாய்வில் அது தெரியவந்தது.

அதில் பங்கேற்றவர்களில் சுமார் 49 விழுக்காட்டினர், உணவங்காடியில் "தட்டுகளை எப்போதும் தாங்களே அப்புறப்படுத்துவதாகக்" கூறினர்.

இதற்குமுன் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த விகிதத்தைக் காட்டிலும் அது சுமார் 14 விழுக்காடு அதிகம்.

மாறாக, உணவங்காடிகளில் "ஒருபோதும் தட்டுகளை அப்புறப்படுத்தியது கிடையாது" என்று 6.6 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.

முன்னைய ஆய்வில் அவ்வாறு குறிப்பிட்டவர்களின் விகிதத்தைக் காட்டிலும் அது சுமார் 10 விழுக்காடு குறைவு.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 84 விழுக்காட்டினர், பொது இடங்களின் ஒட்டுமொத்தத் தூய்மை குறித்து மனநிறைவு தெரிவித்தனர்.

21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூர்க் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் ஆக அண்மைக் கருத்தாய்வில் பங்கேற்றனர்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடையே சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் அந்த ஆய்வை நடத்தியது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்