Images
கமூரி சூறாவளி: பிலிப்பீன்ஸிலுள்ள சிங்கப்பூரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளும்படி ஆலோசனை
பிலிப்பீன்ஸிலுள்ள சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளுமாறு மணிலாவிலுள்ள சிங்கப்பூர் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிலிப்பீன்ஸில் கமூரி சூறாவளி வீசியுள்ள வேளையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பீக்கொல் (Bicol) வட்டாரத்திலிருந்து கிட்டத்தட்ட 70,000 பேர் வெளியேறியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
பிலிப்பீன்ஸில் உதவி தேவைப்பட்டால் சிங்கப்பூரர்கள் காலை 8.30 மணியிலிருந்து மதியம் 5 மணி வரை மணிலாவிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகத்தை +63 2 8856 9922 என்ற எண் மூலம் தொடர்புகொள்ளலாம்.
அதைத் தவிர +63 917 860 4740 என்ற அவசர எண்ணை எந்த வேளையிலும் அவர்கள் அழைக்கலாம்.