Images
  • tour2

SingapoRediscovers பற்றுச்சீட்டு பெறவிருக்கும் வெவ்வேறு வயதினரின் திட்டம் என்ன...?

உள்ளூர் சுற்றுலாத் தலங்களில் செலவு செய்வதற்கு இவ்வாண்டு இறுதியில் சிங்கப்பூரர்களுக்கு 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

அவற்றைக் கொண்டு எங்கு செல்லலாம், என்ன செய்யலாம் எனப் பலரும் திட்டமிடு்கின்றனர்.

அது பற்றிய தகவல்களைச் சேகரித்தது செய்தி...

திருமதி கோகிலா சிவனேசன், 61:


செந்தோசா தீவில் உள்ள இருமாடி ஹோட்டல் அறையில் தங்குவது எனது நீண்ட நாள் ஆசை... ஆனால் அது விலை உயர்ந்த அறையாக இருப்பதால் அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை. நான் அந்தப் பற்றுச்சீட்டைக் கொண்டு நிச்சயமாக செந்தோசாவில் ஒரு நாள் தங்கிவிடுவேன்!

திரு. முகமது ஹலீம், 46:


என் தாயாரையும் மனைவி, பிள்ளைகளையும் Singapore Flyer, Gardens by the Bay, போன்ற இடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் அழைத்துச் செல்வதன் மூலம் குடும்பத்தை மகிழ்ச்சிப்படுத்தலாம். அதற்கு இந்தப் பற்றுச்சீட்டு உதவியாக அமையும்.

குமாரி சசிரேக்கா, 38:


ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கும் எனக்கு ஒவ்வோர் ஆண்டும் விடுமுறையும், வெளியூர்ப் பயணமும் தேவைப்படுகின்றன.

இந்த ஆண்டு என்னால் வெளியூர் செல்லமுடியாததால் டிசம்பர் மாதத்தில் 1 வாரம் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துச் சுற்றுலா பற்றுச்சீட்டைக் கொண்டு சிங்கப்பூரைச் சுற்றிப் பார்ப்பேன்.

திரு. விஷ்வா கணேசன், 29:


என் மனைவியின் பிறந்தநாள் பிப்ரவரி மாதத்தில் உள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு 30 வயது நிறைவாகும். அதனைப் பெரிதாகக் கொண்டாடத் திட்டமிடுகிறேன், சுற்றுலா பற்றுச்சீட்டைக் கொண்டு அவரை அந்நாளில் பல கண்கவர் இடங்களுக்கு அழைத்துச் செல்வேன்.

குமாரி நர்மதா ஜோசஃப், 19:


இவ்வாண்டு முதல்முறை தனியே வெளியூர் செல்லத் திட்டமிட்டிருந்தேன். என் பெற்றோரிடமும் அனுமதி பெற்றிருந்தேன். ஆனால் கிருமிப்பரவல் சூழலில் எல்லாம் மாறிவிட்டது.

பற்றுச்சீட்டைக் கொண்டு, நான் வெளியூரில் இருப்பது போல் கற்பனை செய்து, எல்லா சுற்றுலாத் தலங்களுக்கும் செல்வேன்!

சிங்கப்பூர் சுற்றிப் பார்ப்பதற்கு அழகான, தங்குவதற்குப் பாதுகாப்பான நாடு. உள்ளூர் மக்கள் அதை முழுமையாய் உணர்ந்து ரசித்து, அனுபவிக்க சுற்றுலாப் பற்றுச்சீட்டுகள் நல்ல வாய்ப்பளிக்கும்.

Top