Images
  • ihis
    (படம்: Facebook/IHiS)

சிங்ஹெல்த் இணையத் தாக்குதல் தொடர்பில் இருவர் பணிநீக்கம்

சிங்ஹெல்த் இணையத் தாக்குதல் சம்பவத்தின் தொடர்பில், கவனக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, IHiS எனப்படும் சிங்கப்பூர் ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் கட்டமைப்பு அதன் இரு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

சிங்ஹெல்த் ஊடுருவல் சம்பவத்தில், பிரதமர் லீ சியென் லூங் உட்பட சுமார் ஒன்றரை மில்லியன் பேரின் தனிநபர் தகவல்கள் ஊடுருவப்பட்டன.

சிங்கப்பூர் சுகாதாரத் துறையின் தகவல்களை நிர்வகிக்கும் முக்கிய நிறுவனமான IHiS-இன் 5 மூத்த நிர்வாகிகளுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியது.

இணையத் தாக்குதல்களை விசாரிக்க சுயேச்சையான செயற்குழு ஒன்றை சென்ற நவம்பரில்IHiS நியமித்தது. செயற்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

Top