Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒற்றையர் தினத்தை முன்னிட்டு இணைய வர்த்தகத் தளங்களில் மலிவு விற்பனை

சிங்கப்பூரில் இணைய வர்த்தக நிறுவனங்கள், அடுத்த வாரம் திங்கட்கிழமை வரும் ஒற்றையர் தினத்துக்குத் தயாராகின்றன.

வாசிப்புநேரம் -
ஒற்றையர் தினத்தை முன்னிட்டு இணைய வர்த்தகத் தளங்களில் மலிவு விற்பனை

(படம்: Screengrab from Taobao)

சிங்கப்பூரில் இணைய வர்த்தக நிறுவனங்கள், அடுத்த வாரம் திங்கட்கிழமை வரும் ஒற்றையர் தினத்துக்குத் தயாராகின்றன.

உலகின் ஆகப்பெரிய இணைய வர்த்தக நிகழ்வாக அது கருதப்படுகிறது.

இந்த ஆண்டு வர்த்தகம் மேலும் சூடுபிடிக்கும் என்றும் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டம் காத்திருப்பதாகவும் நிறுவனங்கள் CNAயிடம் தெரிவித்தன.

அமஸான் நிறுவனம் அதன் சிங்கப்பூர் இணைய விற்பனைத் தளத்தைச் சென்ற மாதம் அறிமுகப்படுத்தியது.

ஆண்டிறுதிக் காலத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க இலவச விநியோகம், மேம்பட்ட விருப்பத்தெரிவுப் பட்டியல் போன்ற வசதிகளைக் கொண்டு வரவும் அமஸான் திட்டமிடுகிறது.

2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு ஒற்றையர் தின இணைய விற்பனை நான்கு மடங்கு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

Shopee நிறுவனம் 11 மில்லியனுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளைக் கையாண்டது.

ஒரு கட்டத்தில் ஒரே நிமிடத்தில் 58,000 பொருள்கள் வாங்கப்பட்டன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்