Images
  • singles
    படம்: freestocks.org/Unsplash

ஒற்றையர் இணையைத் தேடுவதற்குக் கூடுதல் வாய்ப்பும் நேரமும் தேவை: ஆய்வு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஒற்றையர் இணையைத் தேடுவதற்கும் புதிய நபர்களைச் சந்திப்பதற்கும் போதுமான வாய்ப்பு, நேரம், உற்சாகம் ஆகியவை தேவைப்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் பெரும்பாலான ஒற்றையர்கள் இணையுடன் வெளியே செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள், பொருத்தமான இணையைத் தேடுவதற்கு இணையத்தளங்களையோ செயலிகளையோ நாடுகின்றனர்.

ஆனால் பெண்களோ சமூக நிகழ்ச்சிகளில் தங்களுக்கு உரிய இணையைச் சந்திக்க விரும்புகின்றனர்.

தேசிய மக்கள்தொகை மற்றும் திறனாளர் பிரிவு நடத்திய இணைய ஆய்வில் 800க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இணையைத் தேடும் போக்கைப்பற்றி ஆராய அந்த ஆய்வு முற்பட்டது.

ஜூலை 26ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 23 தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.


Top