Images
  • singlong
    (படம்: Singapore Food Agency)

Sing Long அறைத்த நிலக்கடலைத் தூள் - கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ள உத்தரவு

Sing Long Foodstuff Trading நிறுவனத்தின் அறைத்த நிலக்கடலைத் தூள் பொட்டலங்களைக் கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ள சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

உணவில் கலந்திருக்கும் aflatoxin அளவு சிங்கப்பூரில் அனுமதிக்கப்படும் வரம்பைவிட அதிகமாக இருப்பதாக அமைப்பு தெரிவித்தது.

அறுவடைக்கு முன்னும், பின்னும் ஏற்படும் பூஞ்சையால் நிலக்கடலை போன்ற உணவு வகைகளில் aflatoxins உண்டாகலாம். அது மனித அணுக்களை உருமாற்றி புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

வழக்கமான சோதனைகளில் உணவுப் பொருளில் aflatoxins கண்டுபிடிக்கப்பட்டது.

நிலக்கடலைத் தூளை வாங்கியவர்கள் அதனை உட்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.

உணவுப் பொருளை உட்கொண்டு உடல்நலம் குறித்த அக்கறைப்படுவோர், மருத்துவ ஆலோசனை பெறுமாறு அமைப்பு தெரிவித்தது.

2019இல், Singlong நிலக்கடலை உணவுப் பொருள் ஒன்றில் உலோகத் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன், ரொட்டியில் தடவும் நிலக்கடலைச் சாந்து பாட்டிலில் ஆணி கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதும் குறிப்பிட்ட சில தொகுதி உணவுப் பொருள்கள் கடைகளிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டன.



 

Top