Images
  • singtel
    (படம்: TODAY/Ili Nadhirah Mansor)

Singtel-இன் கண்ணாடியிழை விரிவலைச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது

Singtel நிறுவனத்தின் பாதிக்கப்பட்ட கண்ணாடியிழை விரிவலைச் சேவை இணைப்புகள், முழுமையாய்ச் சீர் செய்யப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாலை 6.15 மணியளவில், தனது Facebook பக்கத்தில், Singtel அதனைத் தெரிவித்தது.

பலரும் வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தான் உணர்வதாகக் கூறிய நிறுவனம், சேவைத் தடைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தது.

இந்தச் சம்பவத்தைக் கடுமையான ஒன்றாய்க் கருதுவதாகக் கூறிய Singtel, மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்கத் தனது நடைமுறைகளைப் பரிசீலனை செய்யப் போவதாகத் தெரிவித்தது.

சேவைத் தடைக்கான காரணத்தைக் கண்டறிய தனது பொறியாளர்கள் முயன்று வருவதாக, Singtel குறிப்பிட்டது.

இன்று அதிகாலை நேரத்தில், Singtel இணையப் பயனீட்டாளர்கள் சிலர் சேவைத் தடையை எதிர்நோக்கினர். தெம்பனிஸ் (Tampines), அங் மோ கியோ (Ang Mo Kio) உள்ளிட்ட இடங்களில் சேவைத் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  

Top