Images
  • Singtel
    (படம்: AFP/Roslan Rahman)

Singtel நிறுவனத்தின் ஊழியர்கள் திறனை வளர்த்துக்கொள்ளப் புதிய திட்டம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Singtel நிறுவனம், அதன் ஊழியர்களின் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்த அடுத்த மூவாண்டில் 45 மில்லியன் வெள்ளியைச் செலவிடவுள்ளது.

அதனையொட்டி Singtel நிறுவனமும் சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு ஊழியரணியும் (Union of Telecoms Employees of Singapore) சேர்ந்து இணக்கக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
பயிற்சிக் குழு ஒன்றை அமைக்கும் நோக்கத்துடன் இணக்கக் குறிப்பு கையெழுத்தானது.

செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்களால் 12,600 ஊழியர்கள் பலனடைவர்.

அவற்றின் மூலம் அவர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்; வேலைகளை உருமாற்றியும் கொள்ளலாம்.

கூடுதல் காலம் வேலைசெய்யும் நோக்குடன் வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும் திட்டங்களும் முயற்சியில் அடங்கும்.

Top