Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு 101,000 முறை போடத் தேவையான Sinovac தடுப்புமருந்து வந்துசேர்ந்துள்ளது

சிங்கப்பூருக்கு 101,000 முறை போடத் தேவையான Sinovac தடுப்புமருந்து வந்துசேர்ந்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கு 101,000 முறை போடத் தேவையான Sinovac தடுப்புமருந்து வந்துசேர்ந்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) அறிவித்துள்ளார்.

தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் அந்த மருந்தைத் தருவித்தன.

சிறப்புப் பயண ஏற்பாட்டின்வழி அதைக் கொண்டுவர அமைச்சு உதவியதாக திரு. ஓங் சொன்னார்.

mRNA தடுப்புமருந்துகளைப் போட்டுக்கொள்ள முடியாதவர்கள், Sinovac தடுப்புமருந்திலிருந்து பயன்பெறலாம் என்றார் அவர்.

சிங்கப்பூர் மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினர் ஒரு முறையாவது Sinovac தடுப்புமருந்தைப் போட்டுக்கொண்டிருப்பதாக அமைச்சர் ஓங் சொன்னார்.

புதிதாகத் தருவிக்கப்பட்ட மருந்து, அடுத்த சில நாளில் கிடைக்கப்பெறும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்