Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

101,000 முறை போடத் தேவையான Sinovac தடுப்பு மருந்துகளைகளைப் பெறும் சிங்கப்பூர்

சிங்கப்பூர், Sinovac நிறுவனத்திடமிருந்து 101,000 முறை போடத் தேவையான தடுப்புமருந்துகளைக் கூடுதலாகப் பெறவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர், Sinovac நிறுவனத்திடமிருந்து 101,000 முறை போடத் தேவையான தடுப்புமருந்துகளைக் கூடுதலாகப் பெறவிருக்கிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யவேண்டும் என்றும், அது நாளை மறுநாள் முதல் தொடங்கும் என்றும் Sinovac நிறுவனம் குறிப்பிட்டது.

Livingstone Health ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் கீழ் இயங்கும் Phoenix Medical மருந்தகம், Ardennes
சுகாதாரப் பரிசோதனை, கதிரியக்க நிலையம் உள்ளிட்ட 4 மருந்தகங்களில் இம்மாதம் 24ஆம் தேதி முதல் Sinovac தடுப்பூசி போடப்படும்.

ஏனைய 13 மருந்தகளிலும் அது தொடர்ந்து வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் உள்ள முக்கியப் பங்காளிகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதைத் தடுப்பூசி விநியோகம் காட்டுவதாக, Sinovac நிறுவனப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஜூன் மாதத்தில், சுகாதார அமைச்சு, உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரகாலப் பயன்பாட்டுக்கான தடுப்புமருந்துகள் சிலவற்றைச் சிங்கப்பூர் தனியார் மருந்தகங்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தது.

அந்த ஏற்பாட்டின் கீழ், Sinovac தடுப்புமருந்துக்கு சுகாதார அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்