Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Sinovac நிறுவனத்தின் தடுப்பூசி விநியோகிக்கப்படுமுன் அதன் தகவல் மறுஆய்வு செய்யப்படும்

சீன மருந்தாக்க நிறுவனமான Sinovac-விடமிருந்து பெற்றுள்ள அதிகாரபூர்வத் தடுப்பூசித் தகவல் தரவுகளை, அரசாங்கம் மறுஆய்வு செய்யும் என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (Gan Kim Yong) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
Sinovac நிறுவனத்தின் தடுப்பூசி விநியோகிக்கப்படுமுன் அதன் தகவல் மறுஆய்வு செய்யப்படும்

(படம்: REUTERS/Thomas Peter)

சீன மருந்தாக்க நிறுவனமான Sinovac-விடமிருந்து பெற்றுள்ள அதிகாரபூர்வத் தடுப்பூசித் தகவல் தரவுகளை, அரசாங்கம் மறுஆய்வு செய்யும் என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (Gan Kim Yong) கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் அந்த தடுப்பூசி விநியோகம் செய்யப்படுமுன், அது மறுஆய்வு செய்யப்படும் என்றார் அவர்.

Sinovac தடுப்பூசிகள், 50 விழுக்காடு மட்டுமே செயல்திறன்மிக்கவை என பிரேசிலிய ஆய்வாளர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க நிறுவனமான Moderna தனது தடுப்பூசி தகவல்களைச் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவைத் திரு. கானுடன் இணைந்து வழிநடத்தும் திரு லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கூறினார்.

தற்போது அந்த தகவல்களைச், சுகாதார அறிவியல் ஆணையம் மறுஆய்வு செய்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் Pfizer-BioNTech தடுப்பூசிக்கு மட்டுமே இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்