Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டத்தில், வரும் டிசம்பர் மாதத்திலிருந்து, மாதந்தோறும் கூடுதலாக 1,700 பேர் பயனடையவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது

(படம்: Ngau Kai Yan)

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டத்தில், வரும் டிசம்பர் மாதத்திலிருந்து, மாதந்தோறும் கூடுதலாக 1,700 பேர் பயனடையவுள்ளனர்.

கட்டுமானத் துறையில் வேலை செய்வோருக்கான Settling In Programme எனப்படும் அந்தத் திட்டம் சென்ற அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து கடல்துறை, இரசாயனம், உற்பத்தி ஆகிய துறைகளில் உள்ள ஊழியர்களுக்காகவும் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

கடந்த அக்டோபரிலிருந்து சென்ற மாதம் வரை வெளிநாட்டு ஊழியர்கள் 5,000 அதிகமானோர் அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

பயிற்சித் திட்டம் நல்ல பலன் கொடுத்திருப்பதாகவும், வேலையிடம் தொடர்பான சர்ச்சைகளை சுமுகமாக்க அது உதவியதாகவும் மனிதவளத் துணையமைச்சர் ஜாக்கி முகமது கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்