Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கலை அனுபவம்....புதிய தொழில்நுட்பங்கள் வழி

வாட்டர்லூ ஸ்ட்ரீட்டில் (Waterloo Street) உள்ள Stamford கலை நிலையம் மேம்பாட்டுப் பணிகள் முடிந்து புதுப் பொலிவுடன் நாளையிலிருந்து மீண்டும் அதன் சேவையைத் தொடங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

வாட்டர்லூ ஸ்ட்ரீட்டில் (Waterloo Street) உள்ள Stamford கலை நிலையம் மேம்பாட்டுப் பணிகள் முடிந்து புதுப் பொலிவுடன் நாளையிலிருந்து மீண்டும் அதன் சேவையைத் தொடங்கவிருக்கிறது.

திறப்பு விழாவை முன்னிட்டு ஏப்ரல் 5, 6, 7 ஆகிய தேதிகளில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நாளை மாலை அதைத் தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் கதை வடிவில் இரண்டு இந்திய பாரம்பரிய நடனங்களும் இடம் பெறுகின்றன.

கலை நிலையத்தில் மொத்தம் 9 இடங்களில் புதிய அனுபவங்களைப் பெறலாம்.

மெய்நிகர் தொழில்நுட்பம் (Virtual Reality), மிகை மெய் நிகர் தொழில்நுட்பம் (Augmented Reality) ஆகியவை பாரம்பரியக் கலைகளை வித்தியாசமான வடிவில் கண்முன் கொண்டுவருகின்றன.

புதிய நிலையத்தில், பன்னோக்கு மண்டபமும் அமைந்திருக்கிறது. அங்கு கலை நிகழ்ச்சிகள், ஒத்திகைகள் ஆகியவை இடம்பெறும்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்