Images
  • reef1
    (படம்:Jeremy Long)

Sisters’ தீவுகளில் கடல்வாழ் உயிரினங்களுக்காகச் செயற்கைப் பவளப்பாறைகள்

சிங்கப்பூரில் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பயனளிக்கும் வகையில் Sisters’ தீவுகளில் செயற்கைப் பவளப்பாறை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

10 மீட்டர் உயரம் கொண்ட அந்தப் பவளப் பாறை concrete, கண்ணாடி இழைக் குழாய்கள், மறுபயனீடு செய்யப்பட்ட கற்துண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டது.

கடல்வாழ் விலங்குகளும் தாவரங்களும் செழிக்க அந்தச் செயற்கைப் பாறை உதவும்.

சிப்பி வகைகள், நத்தைகள், நண்டுகள் போன்றவை அந்தப் பாறையைப் பயன்படுத்தி வளரலாம்.

மீன்களுக்குத் தேவையான மறைவிடங்களையும் அந்தப் பாறை வழங்கும்.

அத்தகைய 8 செயற்கைப் பாறைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கடலுக்கடியில் ஒரே பகுதியில் வைக்கப்படவுள்ளன.


சிங்கப்பூரின் ஆகப் பெரிய செயற்கைப் பவளப்பாறை பகுதியை உருவாக்க தேசியப் பூங்கா வாரியம், JTC, அரசாங்க அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன.

பாறையை 12 மீட்டர் ஆழத்துக்கு கடலுக்குள் வைத்த முதல் மூன்றிலிருந்து ஆறு மாதத்துக்குள் அதில் கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் பாசி வகைகள் அங்கு வளரத் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.


JTC-NParks பவளப் பாறைத் தோட்டம் என்று அது அழைக்கப்படும்.

2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 1000 சதுரமீட்டர் அளவிலான கூடுதல் பவளப்பாறைப் பகுதி அந்த முயற்சியினால் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

செயற்கைப் பவளப்பாறைகள் சுமார் 100 ஆண்டுக்கு நீடிக்கும் என்று நம்பப்படுகிறது.

அவற்றுக்குக் குறைவான பராமரிப்பே தேவைப்படும்.
 

Top