Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம்

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழப் புதிய வளாகம், தொழில்துறைப் பங்காளித்துவத்தை வளப்படுத்தி, சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம்

(படம்: Singapore Institute of Technology)


சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழப் புதிய வளாகம், தொழில்துறைப் பங்காளித்துவத்தை வளப்படுத்தி, சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும்.

பொங்கோலில் அமையவுள்ள அந்த வளாகத்துக்கான கட்டுமானப் பணி இன்று தொடங்கியது.

ஒரு பில்லியன் வெள்ளிக்கும் மேல் செலவாகும் அந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.

அப்போது, வனங்களுக்கிடையிலான வடகிழக்கு நீர்முகப்பு உருமாறும்.

சுமார் 90 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவுள்ள புதிய வளாகம், இரண்டு நிலப்பகுதிகளை நிறைத்திருக்கும்.

வருங்கால விரிவாக்கத்திற்காகவும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது,

சுமார் ஒன்றரை ஹெக்டர் பசுமைப் பகுதியைச் சுற்றியும், அதற்கு அடியிலும் 12 ஆயிரம் மாணவர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

JTC நிறுவனத்தின் புதிய வர்த்தகப் பேட்டையை இணைக்கும் புதிய பாலங்களும் அமைக்கப்படும்.

தொழில்துறைப் பங்காளிகளுக்காக 8,000 சதுர மீட்டர் நிலம் ஒதுக்கப்படும்.

JTC நிறுவன வளாகத்தில் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கவும் வாய்ப்பு உண்டு.

புதிய வளாகம், மாணவர்களுக்கான வேலைப்பயிற்சிக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்பது நம்பிக்கை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்