Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்துக்குச் சீனக் குலமரபுச் சங்கம் $1.8 மில்லியன் நன்கொடை

சிங்கப்பூரின் ஆகப் பழைய சீனக் குலமரபுச் சங்கமான ஹாக்கியென் ஹுவெய் குவான் (Hokkien Huay Kuan) சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்துக்கு 1.8மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் ஆகப் பழைய சீனக் குலமரபுச் சங்கமான ஹாக்கியென் ஹுவெய் குவான் (Hokkien Huay Kuan) சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்துக்கு 1.8மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது.

கரியமில வாயு வெளியேற்றம் முற்றிலும் இல்லாத கட்டடங்களை உருவாக்க அந்த நன்கொடை பயன்படுத்தப்படும்.

பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதுடன் காலத்திற்கு ஏற்ப மாறிவரும் ஹாக்கியென் ஹுவெய் குவான் சங்கம், தனது 180ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

அதை முன்னிட்டு, கொரோனா கிருமிப்பரவலால் பொருளியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சங்கம் உதவியது.

வசதி குறைந்த 400 பேருக்கு, ஆளுக்கு 500 வெள்ளி கல்வி உதவிநிதி வழங்கப்பட்டது.

சிங்கப்பூரிலும் ஆசிய வட்டாரத்திலும் சங்கம் கடந்த 180 ஆண்டுகளில் ஆற்றிய பங்கை நினைவுகூரும் புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் லீ சியென் லூங், பல்வேறு சமூகங்களுக்குஹாக்கியென் மக்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்துப் பேசினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்