Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

St Joseph’s கழகத்தில் சம்பவத்தை நேரில் கண்ட மாணவர்களுக்கு மனநல ஆதரவு - பள்ளி முதல்வர்

செயின்ட் ஜோசஃப் (St Joseph’s) கழகத்தில், உணவு இடைவேளையின்போது மாணவர் ஒருவர் 4ஆம் தளத்திலிருந்து விழுந்ததாக நிலையத்தின் குழுத் தலைவர் திரு. லீ கொக் ஃபாட் (Lee Kok Fatt) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

செயின்ட் ஜோசஃப் (St Joseph’s) கழகத்தில், உணவு இடைவேளையின்போது மாணவர் ஒருவர் 4ஆம் தளத்திலிருந்து விழுந்ததாக நிலையத்தின் குழுத் தலைவர் திரு. லீ கொக் ஃபாட் (Lee Kok Fatt) தெரிவித்துள்ளார்.

மாணவரின் பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவருடன் ஆசிரியர் ஒருவரும் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அவர் CNA-விடம் கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அவர் வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

காவல்துறை விசாரணை நடந்து வருவதால், மேல் விவரங்களை அளிக்க முடியாது என நிலையம் குறிப்பிட்டது.

காயமுற்ற மாணவர் மற்றும் அவரது குடும்பத்தின் அந்தரங்கத்தை மதித்து, சம்பவம் குறித்து ஏதும் ஊகிக்கவோ பகிரவோ வேண்டாம் என அது கேட்டுக்கொண்டது.

இதற்கிடையில், சம்பவத்தை நேரில் கண்ட மாணவர்களுக்கு மனநல ஆதரவு வழங்கப்படும் என கல்வி நிலையத்தின் முதல்வர் ஏட்ரியன் டாங்கர் (Adrian Danker) கூறியுள்ளார்.

பிள்ளைகள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தாலோ, அவர்களுக்கு ஆதரவு தேவை என்று நினைத்தாலோ பள்ளி ஆசிரியரிடம் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பெற்றோருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அது பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்த படங்களையோ காணொளிகளையோ பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நிலையம் தொடர்ந்து மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை மறு உறுதிப்படுத்த விரும்புவதாகவும் டாக்டர் டாங்கர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்