Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் திறன் பயிற்சிக் குறைபாட்டால் 40 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் வேலையைக் கைவிடுகின்றனர்

சிங்கப்பூரில் 40 விழுக்காட்டுக்கு மேற்பட்ட ஊழியர்கள் திறன்பயிற்சி போதாத காரணத்தால் வேலையைக் கைவிட்டிருப்பதாக ஆய்வொன்று கூறுகிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் திறன் பயிற்சிக் குறைபாட்டால் 40 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் வேலையைக் கைவிடுகின்றனர்

(படம்: Unsplash)

சிங்கப்பூரில் 40 விழுக்காட்டுக்கு மேற்பட்ட ஊழியர்கள் திறன்பயிற்சி போதாத காரணத்தால் வேலையைக் கைவிட்டிருப்பதாக ஆய்வொன்று கூறுகிறது.

ஐந்தில் இரண்டு ஊழியர்கள் அவர்களுக்குப் போதிய திறன் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படாததால் நிறுவனத்திலிருந்து வெளியேறினர்.

பயிற்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள நேரமின்மை முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான எதிர்பார்ப்புகளில் இருக்கும் மிகப்பெரிய முரண்பாடுகளும் அதற்கு இட்டுச்செல்கின்றன.

ஒரு நிறுவனத்தின் கற்றல், வளர்ச்சித் திட்டங்களில் 17 விழுக்காட்டு ஊழியர்கள் மட்டுமே மனநிறைவு கொள்வதாக ஆய்வு கூறுகிறது.

LinkedIn வேலை தொடர்புத் தளத்தில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களும் இருநூற்றுக்கு மேற்பட்ட கற்றல், மேம்பாட்டுப் பிரிவு நிபுணர்களும் ஆய்வில் பங்கேற்றனர்.

ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மறுபயிற்சிக்குச் செல்லவும் அரசாங்கம் ஊக்குவித்துவரும் வேளையில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

SkillsFuture எனப்படும் எதிர்காலத் திறன் வளர்ச்சித் திட்டம், Professional Conversion Programme எனப்படும் நிபுணத்துவ மாற்றுத் திட்டம் ஆகியவற்றை சிங்கப்பூர் நிறுவனங்களும் ஊழியர்களும் தங்களின் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்