Images
  • skills future
    (கோப்புப் படம்: AFP/Simin Wang)

SkillsFuture Singapore அமைப்பு 2 புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்கிறது

SkillsFuture Singapore அமைப்பு, 2 புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

பணியிடை மாற்றம் செய்வோருக்கு, தொழில்துறை சார்ந்த கூடுதலான பயிற்சி வாய்ப்புகளை வழங்குவது அதன் நோக்கம்.

பாடத்திட்டங்களில் ஒன்று, கட்டுமானத் துறையைச் சேர்ந்தது.

Johnson Controls நிறுவனம், நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து அந்தப் பாடத்திட்டம் வழங்கப்படுகிறது.

கட்டடச் சேவை நிர்வாகம், பசுமைக் கட்டட நிர்வாகம், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற அம்சங்களோடு தொடர்புடைய திறன்களைப் பங்கேற்பாளர்கள் பெறுவர்.

100 பேர்வரை அதன்மூலம் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரியுடன் இணைந்து, அனைத்துலகத் தொழில்நுட்பத் திறன் திட்டம் எனும் பாடத்திட்டத்தையும் அமைப்பு அறிமுகம் செய்கிறது.

மின்னிலக்கமயமாதல், அனைத்துலகமயமாதல் ஆகியவை தொடர்பான திறன்களைப் பங்கேற்பாளர்கள் பெற, அது வாய்ப்பளிக்கும்.

மென்பொருள் பொறியாளர், செயலி வடிவமைப்பாளர் போன்ற வேலைகளுக்கு அந்தப் பாடத்திட்டம் பங்கேற்பாளர்களைத் தயார்ப்படுத்தும். 

Top