Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திறன்களை வளர்ப்பதற்குக் கூடுதல் கற்றல் தெரிவுகள்- SkillsFuture தொகையைப் பயன்படுத்தலாம்

சிங்கப்பூரர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்திக்கொள்ள நீக்குப்போக்கான கூடுதல் கற்றல் தெரிவுகளை எதிர்பார்க்கலாம்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்திக்கொள்ள நீக்குப்போக்கான கூடுதல் கற்றல் தெரிவுகளை எதிர்பார்க்கலாம்.

அடுத்த மாதம் முதல், SkillsFuture தொகையைக் குறிப்பிட்ட இணையக் கற்றல் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

25 வயதுக்கு மேற்பட்ட உள்ளூர்வாசிகள் சுலபமாகக் கற்றலை மேற்கொள்ள அது உதவும்.

NTUC கற்றல் நடுவம், Gnowbe, ZilLearn ஆகியவற்றோடு இணைந்து SkillsFuture சிங்கப்பூர் அமைப்பு ஈராண்டு முன்னோடித் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

அதன் மூலம் சிங்கப்பூரர்கள் 80,000க்கும் அதிகமான சிறிய கற்றல் பாடத்திட்டங்களில் இணையலாம்.

2015ஆம் ஆண்டில் SkillsFuture திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 725,000க்கும் அதிகமானோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகையைப் பயன்படுத்திவிட்டதாகக் கல்வித் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang) குறிப்பிட்டார்.

SkillsFuture சாலைக் கண்காட்சியில் கலந்துகொண்டபோது அவர் அதனைத் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 95 விழுக்காட்டுப் பாடத்திட்டங்கள் வேலை சார்ந்தவை.

கூடுதலானோர் வேலைக்குத் திரும்பும் இவ்வேளையில், கற்றல் தெரிவுகள் அதிகரிக்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, தொகையின் பயன்பாட்டை விரிவுபடுத்த இது சரியான தருணம் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்