Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய பட்டதாரிகளுக்கு 4 புதிய வேலை-கல்வி திட்டங்கள் அறிமுகம்

சிங்கப்பூரில் இன்று நடத்தப்பட்ட SkillsFuture வேலை-கல்வி திட்டக் கண்காட்சியில் 4 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
புதிய பட்டதாரிகளுக்கு 4 புதிய வேலை-கல்வி திட்டங்கள் அறிமுகம்

(கோப்புப் படம்)

சிங்கப்பூரில் இன்று நடத்தப்பட்ட SkillsFuture வேலை-கல்வி திட்டக் கண்காட்சியில் 4 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய பட்டதாரிகளுக்குக் கூடுதலான வேலை-கல்வி வாய்ப்புகளை வழங்க புதிய திட்டங்கள் வகை செய்யும்.

உயர்கல்வி நிலையங்கள் அந்தத் திட்டங்களை வழங்கவுள்ளன.

அவற்றின் மூலம் அடுத்த ஈராண்டுகளில், சிங்கப்பூரர்களுக்கு 140க்கும் மேற்பட்ட வாய்ப்புகள் அளிக்கப்படும்.

2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு பட்டதாரித் தொகுதியிலும், 12 விழுக்காட்டுக்கு, வேலை- கல்வி வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளதாகக் கல்வி, மனிதவள அமைச்சுகளுக்கான துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang) தெரிவித்தார்.

வேலை- கல்வித் திட்டங்கள் மாணவர்களுக்கும் முதலாளிகளுக்கும் தனித்தன்மை வாய்ந்த திறன்களைக் கொடுக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக, இன்று காணொளி வழியாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து, திட்டங்களின் மூலம், 5,600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

அவற்றில் 1,400 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்