Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புகைபிடித்ததால் தகராறு - ரம்பத்தால் முகத்தைக் கிழித்த ஆடவருக்குச் சிறை

புகைபிடிப்பது தொடர்பான வாக்குவாதத்தால், காப்பிக் கடையில் இருந்தவரின் முகத்தை ரம்பத்தால் பதம் பார்த்த 52 வயது ஆடவர் லியாவ் ஹியென் லிங்கிற்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
புகைபிடித்ததால் தகராறு - ரம்பத்தால் முகத்தைக் கிழித்த ஆடவருக்குச் சிறை

(படம்: Jeremy Long)


புகைபிடிப்பது தொடர்பான வாக்குவாதத்தால், காப்பிக் கடையில் இருந்தவரின் முகத்தை ரம்பத்தால் பதம் பார்த்த 52 வயது ஆடவர் லியாவ் ஹியென் லிங்கிற்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கு 2,400 வெள்ளி இழப்பீடு கொடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 3 அன்று 88 லோரோங் 25A கேலாங்கிலுள்ள (88 Lorong 25A Geylang) காப்பிக் கடையில் சம்பவம் நடந்தது.

கடையில் புகைபிடிப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் லியாவ் தம்முடைய நண்பருடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

அருகிலிருந்த இடத்தில் பாதிக்கப்பட்ட 53 வயது ஆடவரும் அவருடைய நண்பர்களும் புகைபிடித்துகொண்டிருந்தனர்.

அந்தப் புகை லியாவ் உட்கார்ந்திருந்த பக்கம் பரவுவதாக லியாவின் நண்பர் கூற இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது.

அதற்கிடையே லியாவ் ரம்பம் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தார்.

மீண்டும் சம்பவ இடத்துக்குத் திரும்பியபோது நண்பருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்வதைக் கண்டு சினமடைந்து ரம்பத்தால் தாக்கியிருக்கிறார் லியாவ்.

பாதிக்கப்பட்ட நபருக்கும் கன்னத்தில் 15 செண்டிமீட்டர் நீளமான வெட்டு.

அவர் 2,400 வெள்ளி மருத்துவ கட்டணம் செலுத்தினார்.

வேண்டுமென்றே ஒருவரைக் காயப்படுத்திய குற்றத்துக்கு லியாவுக்கு அதிகபட்சம் ஏழாண்டு சிறைத்தண்டனை, அபராதம்,பிரம்படி விதிக்க சட்டத்தில் இடமுண்டு.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்