Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கண்ணாடித் துண்டுகள் இருக்கக்கூடும் என்பதால் பதப்படுத்தப்பட்ட பீட்ரூட் மீட்டுக்கொள்ளப்பட்டது

Essential Waitrose நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட பீட்ரூட் உணவுப்பொருளில் கண்ணாடித் துண்டுகள் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை மீட்டுக்கொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
கண்ணாடித் துண்டுகள் இருக்கக்கூடும் என்பதால் பதப்படுத்தப்பட்ட பீட்ரூட் மீட்டுக்கொள்ளப்பட்டது

படம்: Waitrose

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Essential Waitrose நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட பீட்ரூட் உணவுப்பொருளில் கண்ணாடித் துண்டுகள் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை மீட்டுக்கொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்த உணவுப் பொருளை விற்கும் Cold Storage பேரங்காடியிடம் அது குறித்துத் தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு இன்று (மே 24) தெரிவித்தது.

பிரிட்டனிலிருந்து இறக்குமதியாகும் அவற்றை மீட்டுக்கொள்ளும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலாவதியாவதாகும் குறிப்பைக் கொண்ட பீட்ரூட் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

அவற்றை வாங்கிய வாடிக்கையாளர்கள் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

வாங்கிய உணவுப் பொருளை மாற்றிக்கொள்வது பற்றி 1800 8918 100 எனும் தொலைபேசி எண் வழி Cold Storage பேரங்காடியைத் தொடர்புகொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்