Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடல் எடையைக் குறைக்க உதவும் இரு வகைப் பொருட்களில் தடை செய்யப்பட்ட மூலப் பொருள் கண்டுபிடிப்பு

உடல் எடையைக் குறைக்க உதவும் இரு வகை பொருட்களை உண்ண வேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
உடல் எடையைக் குறைக்க உதவும் இரு வகைப் பொருட்களில் தடை செய்யப்பட்ட மூலப் பொருள் கண்டுபிடிப்பு

(படம்: Health Sciences Authority)

உடல் எடையைக் குறைக்க உதவும் இரு வகை பொருட்களை உண்ண வேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Body Slim Herbal, Sparkle Twins ஆகிய இரு பொருட்களிலும், தடை செய்யப்பட்ட Sibutramine மூலப் பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மாரடைப்பும் பக்கவாதமும் ஏற்படுத்தலாம் என்பதால், 2010ஆம் ஆண்டிலிருந்து Sibutramine பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.

100 விழுக்காடு இயற்கையான மூலப் பொருட்களால் Body Slim Herbal, Sparkle Twins ஆகியவை செய்யப்பட்டன என்று தவறாக விவரிக்கப்பட்டு விற்கப்பட்டன.

இவ்விரு பொருட்களை விற்கும் கடைகளும், விநியோகஸ்தர்களும் உடனே விற்பனையை நிறுத்திவிடவேண்டும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்