Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அறிவார்ந்த நகரங்களுக்குத் தீர்வுகளைக் கண்டறியக்கூடிய புதிய ஆய்வுக்கூடம் திறப்பு

அறிவார்ந்த நகரங்களுக்குத் தீர்வுகளைக் கண்டறியக்கூடிய புதிய ஆய்வுக்கூடம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அறிவார்ந்த நகரங்களுக்குத் தீர்வுகளைக் கண்டறியக்கூடிய புதிய ஆய்வுக்கூடம் திறப்பு

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

அறிவார்ந்த நகரங்களுக்குத் தீர்வுகளைக் கண்டறியக்கூடிய புதிய ஆய்வுக்கூடம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

அத்தகைய தீர்வுகளை சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் விரைவுபடுத்துவதற்கு ஆய்வுக்கூடம் திட்டமிடுகிறது.

அதனை CapitaLand சொத்துச்சந்தைக் குழுமம் வழிநடத்துகிறது.

அந்தக் குழுமமும் இதர தொழில்துறை நிறுவனங்களும் சேர்ந்து, ஆய்வுக்கூடத்திற்காக 10 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்துள்ளன.

மெய்நிகர் அம்சங்கள், முப்பரிமாணத் தொழில்நுட்பம் சார்ந்த யோசனைகளை ஆய்வுக்கூடம் ஆராயும்.

நீடித்த தீர்வுகளில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் அவற்றின் புதிய கண்டுபிடிப்புகளை CapitaLand சொத்துகளில் சோதித்துப் பார்க்கலாம்.

ஆய்வுக்கூடம் இதுவரை சுமார் 30 நிறுவனங்களை ஈர்த்துள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 200 நிறுவனங்கள் முன்வரும் என்று CapitaLand நம்புகிறது.

பெரிய, சிறிய நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் பங்காளித்துவத்தை எடுத்துக்காட்ட, ஆய்வுக்கூடம் ஒரு நல்ல உதாரணம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் சிங்கப்பூருக்கு அது முக்கியம் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்