Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிட்டி-பொங்கோல் வட்டாரத்தில் புதிய கழிவு சேகரிப்பு முறை, மறுபயனீட்டுச் சேவை

சிட்டி-பொங்கோல் (City-Punggol) வட்டாரத்தில் வசிக்கும் குடும்பங்களும் வர்த்தகங்களும் அறிவார்ந்த, நீடித்த பொதுக் கழிவு சேகரிப்பு முறைகளையும் மறுபயனீட்டுச் சேவைகளையும் எதிர்பார்க்கலாம்.

வாசிப்புநேரம் -
சிட்டி-பொங்கோல் வட்டாரத்தில் புதிய கழிவு சேகரிப்பு முறை, மறுபயனீட்டுச் சேவை

(படம்: SembWaste)

சிட்டி-பொங்கோல் (City-Punggol) வட்டாரத்தில் வசிக்கும் குடும்பங்களும் வர்த்தகங்களும் அறிவார்ந்த, நீடித்த பொதுக் கழிவு சேகரிப்பு முறைகளையும் மறுபயனீட்டுச் சேவைகளையும் எதிர்பார்க்கலாம்.

SembWaste நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் கீழ் அது சாத்தியமாகும்.

14 மின்சார வாகனங்கள் உட்பட, புதிய கழிவுப்பொருள் சேகரிப்பு லாரிகள் சேவையில் ஈடுபடும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைப்பு பயன்படுத்தவிருக்கும் வாகனங்களில் அது 20 விழுக்காடு.

கேலாங் செராய் சந்தையில் உணவுக் கழிவுச் சுத்திகரிப்புக் கட்டமைப்பும் அறிமுகப்படுத்தப்படும்.

சிட்டி-பொங்கோல் வட்டாரத்தில் தானியக்க, மின்னலக்க முயற்சிகளை SembWaste மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

சேகரிக்கப்பட்ட குப்பை, மறுபயனீடு செய்யப்பட்டவை ஆகியவற்றின் நிகழ்நேரத் தகவல்கள் தொழில்நுட்ப உதவியோடு உடனுக்குடன் அனுப்பப்படும்.

சிட்டி- பொங்கோல் வட்டாரம் என்பது.....

சிட்டி-பொங்கோல் வட்டாரம் என்பது ஹவ்காங், மெக்பெர்சன், பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதி, செங்காங் குழுத்தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும்.

மவுண்ட்பாட்டன், பொத்தோங் பாசிர் தனித்தொகுதி, அல்ஜூனிட், அங் மோ கியோ, ஜலான் பசார், மரீன் பரேட், பாசிர் ரிஸ் பொங்கோல் குழுத்தொகுதி ஆகியவற்றின் சில பகுதிகளும் இதன் கீழ் வரும்.

வட்டாரம் சுமார் 250,000 வீடுகளை உள்ளடக்கியிருக்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்