Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டுக்கு வெளியே புகைபிடித்தவர் வெப்பக் கண்காணிப்புக் கேமராவில் பதிவு - விசாரணைகளில் உதவ வீட்டு உரிமையாளருக்குக் கடிதம்

பிடோக் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றின் வெளியே பலமுறை ஒருவர் புகைபிடித்தது தொடர்பான விசாரணையில் உதவுமாறு, அந்த வீட்டுச் சொந்தக்காரருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வீட்டுக்கு வெளியே புகைபிடித்தவர் வெப்பக் கண்காணிப்புக் கேமராவில் பதிவு - விசாரணைகளில் உதவ வீட்டு உரிமையாளருக்குக் கடிதம்

(படம்: CNA)


பிடோக் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றின் வெளியே பலமுறை ஒருவர் புகைபிடித்தது தொடர்பான விசாரணையில் உதவுமாறு, அந்த வீட்டுச் சொந்தக்காரருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புளோக் 620 பிடோக் ரெசர்வோர் ரோட்டில் அமைந்திருக்கும் அவ்வீட்டுக்கு வெளியே 12 சந்தர்ப்பங்களில், ஒருவர் புகைபிடிப்பது Thermal camera எனப்படும் வெப்பக் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் 11இலிருந்து 14இற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த அக்குற்றச்செயல் தொடர்பான விசாரணையில் உதவுமாறு அவ்வீட்டுக்குச் சொந்தக்காரருக்கு ஜூன் 6 அன்று கடிதம் அனுப்பப்பட்டதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து புளோக் 620இல் புகைபிடிப்பது குறித்த 13 புகார்களைப் பெற்றுள்ளதாக அமைப்பு CNAவிடம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று வெப்பக் கண்காணிப்புக் கேமரா.

தடைவிதிக்கப்பட்ட இடங்களில் புகைபிடிப்பதைத் தடுக்க வெப்பக் கண்காணிப்புக் கேமராக்கள் பயன்படுத்துவது பற்றி அமைப்பு ஆராய்ந்து வருவதாக சுற்றுப்புற, நீர்வள மூத்த துணையமைச்சர் ஏமி கோர் கடந்த ஆண்டு செப்டம்பரில் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்திலிருந்து அத்தகைய சுமார் 70 கேமராக்களைக் குடியிருப்பு வட்டாரங்களிலும் மற்ற இடங்களிலும் பொருத்தியுள்ளதாக, அமைப்பு CNAவிடம் தெரிவித்துள்ளது.

கடிதத்தைப் பெற்ற நபர் அதனைப் பெற்ற 14 நாள்களுக்குள் குற்றம் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்.

அப்படிச் செய்யத் தவறினால் புகைபிடிக்கத் தடை செய்யப்பட்டிருக்கும் இடங்களுக்கான சட்டத்தின்கீழ் அவருக்கு 2,000 வெள்ளிக்குட்பட்ட அபராதம் விதிக்கப்படலாம்.

அடுக்குமாடி வீட்டுப் பொதுத் தாழ்வாரம், படிக்கட்டுகள், அடுக்குமாடிக் கட்டடக் கீழ்த் தளம் போன்ற இடங்களில் புகைபிடிப்பது, சட்டப்படி குற்றமாகும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்