Images
  • smoke
    படம்: CNA reader

ஜொகூரிலுள்ள குப்பை நிரப்பு நிலத்தில் எரிந்துகொண்டிருக்கும் தீயால் சிங்கப்பூரில் புகை வாடை

சிங்கப்பூர்க் கிழக்குப் பகுதியின் புகை வாடைக்கு ஜொகூரிலுள்ள குப்பை நிரப்பு நிலத்தில் எரிந்துகொண்டிருக்கும் தீதான் காரணம் என்று சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஜொகூரில் உள்ள பண்டார் தெங்காரா (Bandar Tenggara) குப்பை நிரப்பு நிலத்தில் செவ்வாய்க்கிழமையிலிருந்து தீ எரிந்துகொண்டிருக்கிறது.

அல்லும் பகலுமாக மலேசிய அதிகாரிகள், தீயை அணைக்கப் போராடிக்கொண்டிருப்பதாக அமைப்பு குறிப்பிட்டது.

வெள்ளிக்கிழமை முதல் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் புகை வாடை வந்ததாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

அண்டை நாடுகளிலிருந்து புகைமூட்டம் சிங்கப்பூருக்கு வந்திருக்கலாம் என்று சிலர் சமூக ஊடகங்களில் ஊகித்தனர்.

புகையை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் சிங்கப்பூரில் அடையாளம் காணப்படவில்லை என்றும் மற்ற நாடுகளிலிருந்து புகைமூட்டம் சிங்கப்பூருக்கு வரவில்லை என்றும் அமைப்பு தெரிவித்தது.

நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறிய அமைப்பு, மாற்றங்கள் பற்றி மக்களுக்குத் தகவல் அளிக்கப்படும் என்று தெரிவித்தது.


Top