Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குறுஞ்செய்தி அனுப்பிப் பெண்ணைத் தொந்தரவு செய்தவருக்குச் சிறை

கஸக்ஸ்தான் பெண் ஒருவரைச் சட்டவிரோதமாகப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்த 44 வயது ஆடவருக்கு 2 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

கஸக்ஸ்தான் பெண் ஒருவரைச் சட்டவிரோதமாகப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்த 44 வயது ஆடவருக்கு 2 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோலின் மாக் இயூ லூங் (Mak Yew Loong) என்ற அந்த ஆடவர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பெண்ணைச் சந்தித்தார்.

அன்றிலிருந்து மாக் அந்தப் பெண்ணுக்கு WhatsApp மூலம் தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பத் தொடங்கினார்.

ஒரு வாரத்தில் 173 குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தார். அதற்கு அந்தப் பெண் 20 பதில்கள் அனுப்பினார்.

மாக், சென்ற ஆண்டு நவம்பர் மாதத்துக்கும், இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கும் இடையே 62 மின்னஞ்சல்களும் அனுப்பியிருந்தார்.

அந்தப் பெண் எதையும் பொருட்படுத்தவில்லை.

இருப்பினும், மாக் தொடர்ந்து அவரைத் தொந்தரவு செய்தார்.

இறுதியாக அந்தப் பெண் மாக்கின் எண்ணை WhatsApp-இல் தடுத்தார்.

அதற்குப் பின் கடந்த பிப்ரவரி மாதம் மாக் அந்தப் பெண்ணின் வேலையிடத்துக்குச் சென்று தொந்தரவு செய்யத் தொடங்கினார்.

இறுதியில் பெண் காவல்துறையிடம் புகார் அளிக்க, மாக் கைதுசெய்யப்பட்டார்.

மாக் குற்றங்களை ஒப்புக்கொண்டர்.

3 பெண்களைத் தொந்தரவு செய்த குற்றத்துக்காக, 2013-ஆம் ஆண்டு ஏற்கனவே மூவாண்டுகள் சிறையிலடைக்கப்பட்டவர் மாக்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்