Images
  • sit

சமூக ஒன்றுகூடல்களில் 5 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி

சிங்கப்பூர் சமூகத்தில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கருத்தில்கொண்டு சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவுள்ளன.

சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 8லிருந்து 5க்குக் குறைக்கப்படும்.

ஒரே வீட்டில் அல்லது பொது இடங்களில் சந்திப்பதற்கான எண்ணிக்கையும் 5க்குக் குறைக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 முறை மட்டுமே வீடுகளில் அல்லது வெளியிடங்களில் கூடலாம்.

வேலையிடங்களுக்குச் சென்று பணிபுரிய அனுமதிக்கப்படும் ஊழியர்களின் விகிதத்தை, நிறுவனங்கள், தற்போதுள்ள 75 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காட்டுக்கு குறைக்கவேண்டும்.

வரும் 8ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 30ஆம் தேதிவரை புதிய விதிமுறைகள் நடப்பில் இருக்கும் என அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு அறிவித்துள்ளது.

Top