Images
  • software errors (1)

திருமணப் பதிவகம் தவறாக அனுப்பிய வாழ்த்துக் குறுந்தகவல்களுக்கு மென்பொருள் கோளாறே காரணம்

திருமணப் பதிவகம் தவறாக அனுப்பிய வாழ்த்துக் குறுந்தகவல்களுக்கு மென்பொருள் கோளாறே காரணம் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் தெரிவித்துள்ளன.

அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய சிரமத்துக்கு இரண்டு அமைச்சுகளும் இன்று (செப்டம்பர் 13) மன்னிப்புக் கேட்டுக்கொண்டன.

கடந்த ஞாயிறன்று (செப்டம்பர் 9) ஏற்பட்ட மென்பொருள் கோளாற்றால், மணமுடித்ததற்கு வாழ்த்துத் தெரிவித்து, தவறாகக் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன.

அந்தக் குறுந்தகவல்களில் பெயர்கள், தனிப்பட்ட தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

குறுந்தகவல் கிடைத்தவர்களுக்கு அதைப் புறக்கணிக்குமாறு கூறி மற்றொரு
குறுந்தகவல் அனுப்பப்பட்டதாக அமைச்சுகள் தெரிவித்தன.

மென்பொருள் கோளாற்றால், பொதுமக்களின் தனிப்பட்ட விவரம் ஏதும் ஊடுருவப்படவில்லை என்றும் அது இணையத் தாக்குதல் இல்லை என்றும் அவை உறுதிப்படுத்தின.

இம்மாதிரியான தவறு மீண்டும் நிகழாமல் இருக்க, கூடுதல் பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவை தெரிவித்தன.

 

Top