Images
  • south koreans arrested
    படம்: Facebook/Today

St Regis ஹோட்டல் அருகே 5 தென்கொரியர்கள் கைது

சிங்கப்பூரில் தென்கொரியப் பெண்கள் ஐவர் St Regis ஹோட்டல் அருகே நேற்றிரவு (ஜூன் 11) கைதுசெய்யப்பட்டனர். அந்த ஹோட்டலில்தான் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அவரின் பேராளர் கூட்டமும் தங்கியிருந்தனர்.

ஐவரும் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்ளின் ரோட்டில் இரவு 9.10 மணியளவில் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


காவல் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க அவர்கள் மறுத்தனர். ஆவேசமடைந்த அவர்கள் கத்திக் கூக்குரலிட்டனர். பலமுறை அதிகாரிகள் எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தனர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.


உங்கள் கருத்து

Top