Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரையில் குவிந்துள்ள குப்பை...காரணம் என்ன?

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரை முழுவதும் குப்பை குவிந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரையில் குவிந்துள்ள குப்பை...காரணம் என்ன?

படம்: FACEBOOK/Kenneth Wong

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரை முழுவதும் குப்பை குவிந்துள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்கள், கேன்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் என கண்களுக்கு எட்டிய தூரம் வரை குப்பை குவிந்திருக்கும் படங்கள் சில அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவுசெய்யப்பட்டன.

ஆனால், அந்தக் குப்பை, கடற்கரைக்குச் சென்றவர்களால் விட்டுச்செல்லப்பட்ட பொருள்கள் அல்ல. தென்மேற்குப் பருவமழை காரணமாக கரையில் குப்பை ஒதுங்கியுள்ளதாக 8 World இணையப்பக்கம் தெரிவித்தது.

சிங்கப்பூர் அனைத்துலகக் கரையோரத் தூய்மை அமைப்பு அதன் Facebook பக்கத்தில் சிங்கப்பூரின் கரைகளில் கூடுதல் குப்பை சேரும் என்று இம்மாதத் தொடக்கத்தில் பதிவிட்டது.

இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகளில் உள்ள கப்பல்களில் இருந்தும், தென்மேற்கு சீனாவின் கரைகளிலிருந்தும் குப்பைகள் அடித்துக் செல்லப்படுவதாக சில இணையவாசிகள் Facebookஇல் கருத்துத் தெரிவித்தனர்.

அரசாங்க அமைப்புகளும், குத்தகையாளர்களும் கரையில் ஒதுங்கிய குப்பையை அடிக்கடி அப்புறப்படுத்துவதாக Green Nudge எனப்படும் சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்களும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரையில் ஒதுங்கும் குப்பையை அப்புறப்படுத்த முயற்சி எடுக்கலாம் என்று அமைப்பு அறிவுறுத்தியது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்