Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சென்ற ஆண்டு பட்டயம் பெற்றவர்களில், 6 மாதங்களுக்குள் பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு

சிங்கப்பூரில் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கல்வி முடித்து வெளியேறிய மாணவர்களில் பணியமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை சென்ற ஆண்டு குறைந்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கல்வி முடித்து வெளியேறிய மாணவர்களில் பணியமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை சென்ற ஆண்டு குறைந்துள்ளது.

சென்ற ஆண்டு, படித்து முடித்த 6 மாதங்களில் சுமார் 87.4 விழுக்காட்டு மாணவர்கள் பணியமர்த்தப்பட்டது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனா கிருமிப்பரவல் காரணமாக சிங்கப்பூரின் வேலைச் சந்தை மந்தமடைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 90.7 விழுக்காடு.

பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டயம் பெற்ற மாணவர்களுக்கான வருடாந்தர வேலை நியமன ஆய்வில் 7,360 மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் முழுநேர வேலை கிடைத்தோர்:

சென்ற ஆண்டு (2020): சுமார் 52%

2019: 61.1%

பகுதிநேர வேலைக்குச் சேர்ந்தோர் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க சென்ற ஆண்டு அதிகரித்துள்ளது.

பகுதிநேர வேலையில் சேர்ந்த மாணவர்கள்:

2019: 25.5 %

சென்ற ஆண்டு (2020): 31.6 %  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்