Images
  • sparkle
    படம்:  சமூக ஊடகம்

Sparkletots பாலர் பள்ளிகள் அனுப்பிய "தமிழ்க் கடிதத்தில்" புரியாத எழுத்துகள்

Sparkletots பாலர் பள்ளி சென்ற வாரம், அதன் மாணவர்களில் சிலரின் பெற்றோருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுத்துருக் கோளாற்றால் தமிழ் எழுத்துகள் தாறுமாறாய் இருந்தன.

எழுத்துருவில் பிழைகள் கொண்ட அந்தக் கடிதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள் செயல் கட்சி சமூக அறக்கட்டளை, 360 SparkleTots நிலையங்களை நடத்துகிறது. 

கடிதத்தில் சிறுவர் தினம் குறித்த வாழ்த்து இருந்தது.

தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூவின் (Desmond Choo) பெயரில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அது பற்றிச் சிலர் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.

அந்தக் கடிதம் தங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

அது மிகவும் வருத்தம் அளிப்பதாக தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறினார்.

சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் இதுபோல சில சம்பவங்கள் நடந்திருந்தும், தவற்றைக் கவனிக்காமல் பள்ளி இதற்கு ஒப்புதல் அளித்திருப்பது வேதனைக்குரியது என்றார் அவர்.

கடிதத்தில் ஏன் அத்தகைய பிழைகள் இருந்தன? எதிர்காலத்தில் அத்தகைய பிழைகளைத் தவிர்க்க என்ன செய்யப்படும் ? - 'செய்தி' SparkleTotsஇடம் அந்தக் கேள்விகளை முன்வைத்துள்ளது.  

Top