Images
  • pap

PCF Sparkletotsஇன் தமிழ்க் கடிதத்தில் புரியாத எழுத்துகள் - வருத்தம் தெரிவித்தது PAP சமூக அறநிறுவனம்

PCF Sparkletot பிள்ளைகளுக்கு அனுப்பிய தமிழ்க் கடிதத்தில் புரியாத எழுத்துகள் இடம்பெற்றதற்கு PAP சமூக அறநிறுவனம்
வருத்தம் தெரிவித்துக்கொண்டுள்ளது.

அந்தத் தவறு மீண்டும் நேராமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி விக்டர் பே கூறினார்.

அதன் கீழ் 360 பாலர் பள்ளிகள் செயல்படுகின்றன.

அண்மையில் PCF Sparkletots, சிறுவர் தினத்தை முன்னிட்டு அனுப்பிய கடிதத்தில் புரியாத எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.

அதைத்தொடர்ந்து 'செய்தி' PCF Sparkletotsஇடம் மேல் விவரம் கேட்டது.

சிறுவர் தினத்திற்காகக் கடந்த 4ஆம் தேதி பிள்ளைகளுக்குச் சில கற்றல் வளங்களை அனுப்பினோம்.

கற்றல் வளங்கள் தொடர்பாக பெற்றோருக்கு ஆங்கிலத்திலும் தாய்மொழியிலும் கடிதங்களை அச்சிட்டோம்.

தமிழ்க் கடிதத்தின் எழுத்துருவில் பிழைகள் இருந்ததை 4ஆம் தேதிதான் கண்டறிந்தோம்.

தமிழ் எழுத்துகளை அச்சிடும் மென்பொருளில் ஏற்பட்ட தவற்றால் அந்தக் குழப்பம் உண்டானது.

பின்னர் திருத்தங்களை உடனடியாகச் செய்து, பெற்றோருக்குப் புதிய கடிதம் அனுப்பப்பட்டது.

11 நிலையங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. அதனால் 129 மாணவர்களுக்கு எழுத்துப் பிழைகள் இருந்த கடிதம் சென்றதாக PCF Sparkletots தெரிவித்தது.

"இதுபோன்ற தவறுகள் மீண்டும் நேராமல் இருப்பதை உறுதி செய்வோம் "

என்றார் திரு. விக்டர் பே.
 

Top