Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மொழி சார்ந்த சூழல் தொடர்ந்து மாறிவருகிறது: பிரதமர் லீ

சிங்கப்பூரில் மொழி சார்ந்த சூழல் தொடர்ந்து மாறிவருவதாக பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மொழி சார்ந்த சூழல் தொடர்ந்து மாறிவருகிறது: பிரதமர் லீ

படம்: CNA

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூரில் மொழி சார்ந்த சூழல் தொடர்ந்து மாறிவருவதாக பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பாக, பாதிக்கும் மேற்பட்ட சீனக் குடும்பங்கள் வீட்டில் மாண்டரின் மொழியைப் பேசியதை அவர் சுட்டினார்.

தற்போது 71விழுக்காட்டுச் சீனக் குடும்பங்கள் வீட்டில் பெரும்பாலும் ஆங்கிலத்தையே பேசுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் போக்கிற்கு இந்திய, மலாய்க் குடும்பங்களும் விதிவிலக்கல்ல என்றார் பிரதமர்.

மாண்டரின் மொழி பேச ஊக்குவிக்கும் இயக்கத்தின் 40ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் லீ பேசினார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர், மறைந்த திரு. லீ குவான் இயூ, மாண்டரின் மொழியைப் பேச வலியுறுத்தும் இயக்கத்தை 1979ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.

சிங்கப்பூர்ச் சீன சமூகத்தினரிடையே தொடர்பை வலுப்படுத்துவது நோக்கம்.

உணவங்காடிக் கடைக்காரர்கள், மூத்த நிர்வாகிகள் எனக் குறிப்பிட்ட தரப்பினரை ஊக்குவிக்கும் வகையில் இயக்கம் தொடக்கம் கண்டது.

கிளைமொழிகளை விட்டு விலகிவந்து ஒன்றுபட்ட சீனச் சமூகமாக மாண்டரின் மொழியில் கவனம் செலுத்துவது நோக்கமாக இருந்தது.

காலப்போக்கில் ஆங்கிலம் அதிகம் பேசும் சிங்கப்பூரர்களை மாண்டரின் பேச ஊக்குவிப்பதில் இயக்கம் கவனத்தைத் திருப்பியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்