Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய சேவையாளர்களுக்கு நன்றிகூறும் மழலையரின் கைவண்ணம்

சிங்கப்பூர் ஆயுதப் படை தினம் அடுத்த மாதம் முதல் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு 8,500க்கும் அதிகமான பாலர்கள் தங்களின் தந்தைகளுக்கு வாழ்த்து அட்டைகளை வழங்கவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
தேசிய சேவையாளர்களுக்கு நன்றிகூறும் மழலையரின் கைவண்ணம்

படம்: Chng Shao Kai/TODAY

சிங்கப்பூர் ஆயுதப் படை தினம் அடுத்த மாதம் முதல் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு 8,500க்கும் அதிகமான பாலர்கள் தங்களின் தந்தைகளுக்கு வாழ்த்து அட்டைகளை வழங்கவுள்ளனர்.

அடுத்த வாரம் தீவெங்கும் 100 பாலர் கல்வி நிலையங்களில் அந்த நடவடிக்கை நடைபெறும். பாலர் பருவப் பயிற்சிக் கழகமும் SAFRAவும் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

'நன்றி' தெரிவிக்கும் வாழ்த்து அட்டைகளில் சிங்கப்பூரின் பிரபல சின்னங்கள் இடம்பெற்றிருக்கும். மெர்லயன், சாங்கி விமான நிலையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தோ பாயோவில் அமைந்திருக்கும் கடல் நாக வடிவிலான விளையாட்டு இடம் போன்றவை அவற்றுள் சில.

படம்: Safra 

சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் கடற்படை, சிங்கப்பூர் ஆகாயப் படை, சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சார்ந்த தேசிய சேவையாளர்களையும் அட்டைகள் சித்தரிக்கும்.

தேசிய சேவையாளர்களின் முக்கியத்துவம், அன்புக்குரியோரைப் பாதுகாக்க நாட்டிற்கு அவர்கள் ஆற்றும் சேவை ஆகியவற்றை மேம்பட்ட முறையில் அங்கீகரிப்பது அதன் நோக்கம் என்று Safra தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்