Images
  • Special
    படம்: Special Olympics Singapore

அறிவு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு முதல் தங்கம்

அபுதாபியில் நடைபெற்றுவரும், அறிவு வளர்ச்சியில் குறைபாடு கொண்டுள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் தமது முதல் தங்கத்தை வென்றுள்ளது.

15 வயது நூர்ஷாலினி ஷானஃப் (Nurshalini Sahnef), F2 பிரிவின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.

போட்டியை 42.53 வினாடிகளில் முடித்த நூர்ஷாலினி, ஐந்தாவது நிலையில் வந்தார்.

ஆனால், முதல் நான்கு நிலைகளில் வந்த வீராங்கனைகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், நூர்ஷாலினி முதலாம் இடத்திற்கு முன்னேறினார்.

F12 பிரிவின் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் சித்தி நுர்ஹையாத்தி (Siti Nurhayati) வெண்கலப் பதக்கம் வென்றார்.

சிங்கப்பூர் அணியில் மொத்தம் 10 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் 6 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.

மார்ச் 14 தொடங்கிய விளையாட்டுப் போட்டிகள், வரும் வியாழக்கிழமை (மார்ச் 21) வரை நடைபெறும்.

Top