Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொடர்புக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு 3 புதிய பள்ளிகள்

தொடர்புக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கென, 3 புதிய பள்ளிகள் நிறுவப்படும் என்று கல்விக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
தொடர்புக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு 3 புதிய பள்ளிகள்

படம்: CNA

தொடர்புக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கென, 3 புதிய பள்ளிகள் நிறுவப்படும் என்று கல்விக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார். ExtraOrdinary Celebration நிகழ்ச்சியில், அவர் அதனைத் தெரிவித்தார். முதல் பள்ளி 2021ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும்.

தொடர்புக் குறைபாடு உள்ள மாணவர்கள் பயிலும் சிறப்புப் பள்ளிகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக குமாரி இந்திராணி கூறினார். இன்னும் அதிகமான மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி கிடைக்க, புதிய பள்ளிகள் வழிவகுக்கும். அதே நேரத்தில் அந்த மாணவர்கள் தரமான கல்வியையும் பெறுவர்.

முதல் பள்ளி Metta நலவாழ்வுச் சங்கத்தால் நடத்தப்படும். 300 மாணவர்கள் அந்தப் பள்ளியில் சேரலாம். 7 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட தொடர்புக் குறைபாடு உள்ள மாணவர்களும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களும் அதன்மூலம் பயன்பெறுவர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்