Images
  • Joseph Low

பொறுப்பில்லாமல் வாகனத்தைச் செலுத்தி நண்பர்களின் மரணத்துக்குக் காரணமான ஆடவர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

புக்கிட் தீமா ரோட்டில் வேகமாக வாகனத்தைச் செலுத்தி தமது நண்பர்களின் மரணத்துக்குக் காரணமானதை, 25 வயது வேன் ஓட்டுநர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சம்பவம் சென்ற ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி நடந்தது.

விநியோகச் சேவை வாகன ஓட்டுநர் ஜோசஃப் லோ மோ பூன் (Joseph Low Moh Boon) வேலை நாளன்று வீடு திரும்பியபின், நண்பர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடச் சென்றார். அவர்கள் மதுபானக் கூடத்துக்குச் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சில மணி நேரங்களுக்குப் பின்னர் வாகனத்தில் நண்பர்களுடன் வீடு திரும்புகையில், லோ வேனை மரத்தில் மோதினார்.

நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்தில் மாண்டனர். லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

லோ நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். முரட்டுத்தனமாக வாகனத்தைச் செலுத்தியதையும் அது நோக்கமில்லா கொலை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அவரது ரத்த, சிறுநீர் மாதிரிகளில் சிறிதளவு போதைப்பொருள் தென்பட்டது.

ஆனால் லோ போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்று அவரது வழக்குரைஞர் கூறினார்.

விசாரணை தொடர்கிறது.  

Top