Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கூடுதல் பள்ளிகளோடு மீண்டும் வந்துவிட்டது 'தமிழோடு விளையாடு 2019'

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு' போட்டியின் மூன்றாம் அத்தியாயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப் பள்ளிகள் பங்கெடுக்கவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு' போட்டியின் மூன்றாம் அத்தியாயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப் பள்ளிகள் பங்கெடுக்கவிருக்கின்றன.

கடந்த ஈராண்டைக் காட்டிலும் இந்த வருடம் கூடுதலான பள்ளிகள் பங்கெடுக்கவிருக்கின்றன. ஏறக்குறைய 90 பள்ளிகள் போட்டியில் கலந்துகொள்ள இவ்வாண்டு விருப்பம் தெரிவித்துள்ளன.

2017இல் 60 பள்ளிகளுடன் தொடங்கிய போட்டிக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் போட்டி இடம்பெறுகிறது. பிழையின்றி தமிழில் எழுத ஊக்குவிப்பது, சொல் வளத்தைப் பெருக்குவது, தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிப்பது ஆகியவை போட்டியின் நோக்கங்கள்.மாணவர்களின் தமிழார்வம் வாழ்நாள் முழுதும் நீடித்திருக்க வேண்டும் என்பது செய்தியின் விருப்பம்.

தமிழோடு விளையாடு 2019

தகுதிச் சுற்று: 9 பிப்ரவரி 2019
கால் இறுதிச் சுற்று: 16 பிப்ரவரி 2019
அரையிறுதிச் சுற்று: 23 பிப்ரவரி 2019
இடம்: செயின்ட் கேபிரியல்ஸ் உயர்நிலைப் பள்ளி

மாபெரும் இறுதிச் சுற்று மார்ச் 9 தேதி நடைப்பெறும்.

போட்டியில் பதிந்துகொள்ள விரும்பும் பள்ளிகள் வாரயிறுதிக்குள் மாணவர்களின் விவரங்களை spellingbee [at] mediacorp.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்