Images
  • SPF Letters
    (படம்:  SPF)

விசாரணைகளில் உதவும்படி கேட்டுக்கொள்ளும் பொய்யான காவல்துறைக் கடிதங்கள்: காவல்துறை எச்சரிக்கை

சிங்கப்பூர்க் காவல்துறை அனுப்பியதைப் போன்ற பொய்க் கடிதங்களைப் பெற்றதாகப் பொதுமக்கள் பலர் புகார் செய்துள்ளனர்.

காவல்துறை அதிகாரியிடமிருந்து அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடும் அக்கடிதங்களைப் பற்றி சிங்கப்பூர்க் காவல்துறை இன்று (டிசம்பர் 5) எச்சரிக்கை விடுத்தது.

குற்றச் சம்பவ விசாரணையில் உதவுவதற்காகக் காவல் நிலையத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியன்று வரும்படி அழைப்பு விடுக்கின்றன அக்கடிதங்கள்.

அவை தன்னிடமிருந்து வரவில்லை என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

வேண்டுமென்றே தொல்லை கொடுக்கும் சம்பவம் என்று இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்கிறது. 

Top