Images
  • Spize
    படம்:  Spize

Spize உணவகம் விநியோகித்த நச்சு உணவால் 15 பேருக்கு பாதிப்பு

Spize உணவகம் விநியோகித்த பொட்டல உணவை (bento sets) உட்கொண்ட 15 பேர் நச்சுணவால் பாதிக்கப்பட்டதாக உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உணவகத்தின் Facebook பக்கத்தில் அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

அந்தச் சம்பவத்தின் தொடர்பில், சுகாதார அமைச்சுடனும், தேசியச் சுற்றுப்புற அமைப்புடனும் இணைந்து பணியாற்றி வருவதாக உணவகம் குறிப்பிட்டது.

கடந்த 6 ஆம் தேதி Spize @ River Valley உணவகத்தில் இருந்து 88 உணவுப் பொட்டலங்கள் ஓரிடத்துக்கு அனுப்பப்பட்டன.

அதை உட்கொண்டவர்களில் 15 பேர் உடல் நலம் குன்றியது தெரியவந்ததாக உணவகம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக உடல்நலம் தேறப் பிரார்த்தனை செய்வதாக உணவகம் குறிப்பிட்டது.

Spize உணவகம் பிடோக், ரிவர் வேலி, ரைஃபில் ரேஞ்ச், சிக்லாப் ஆகிய 4 இடங்களில் செயல்பட்டு வருகிறது.  

Top