Images
  • e-scooter
    படம்: scootersg.com

புதிய தீ பாதுகாப்புத் தரநிலையைப் பூர்த்தி செய்யும் மின்-ஸ்கூட்டர் வகையின் தேவை அதிகரிப்பு

நிலப் போக்குவரத்து ஆணையம் நிர்ணயித்துள்ள புதிய தீ பாதுகாப்பு தரநிலையைப் பூர்த்தி செய்யும் மின்-ஸ்கூட்டரின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

சந்தையில், பல வகையான மின்-ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டாலும், Segway Ninebot ES2 வகை மின்-ஸ்கூட்டர் மட்டுமே புதிய தரநிலையைப் பூர்த்தி செய்துள்ளது.

2021ஆம் ஆண்டிற்குள், UL2272 சான்றிதழ் பெறாத தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், சட்டவிரோதமாகக் கருதப்படும் என்று அரசாங்கம் திங்கட்கிழமை அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து Segway Ninebot ES2 வகை மின்-ஸ்கூட்டருக்கான தேவை அதிகரித்துள்ளது.


Top