Images
  • Spize man died (1)

Spize உணவகத்தின் உணவைச் சாப்பிட்ட ஒருவர் மரணம்

Spize உணவகம் விநியோகம் செய்த உணவைச் சாப்பிட்ட, துணைக் காவல்படை அதிகாரி ஒருவர் மாண்டார்.

SATS நிறுவனத்தில் பணிபுரிந்த 38 வயது திரு. ஃபட்லி சாலே (Fadli Saleh), அந்த உணவை உட்கொண்ட 72 பேரில் ஒருவர்.

அந்த உணவகத்தின் ரிவர் வேலி (River Valley) கிளையில் இருந்து, Brink's சிங்கப்பூர் பாதுகாப்பு நிறுவனம் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சிக்காக உணவு விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

உணவைச் சாப்பிட்டு நோய்வாய்ப்பட்ட திரு. ஃபட்லி, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் மாண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மரணத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை. அது குறித்து மரண விசாரணை அதிகாரி விசாரணை நடத்துவார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, Spize உணவகம் விநியோகித்த உணவைச் சாப்பிட்டுப் பாதிக்கப்பட்டோரில் ஒன்பது பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 36 பேர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

Top