Images
  • Spize
    படம்:  Spize

River Valley Spize உணவகத்தின் உரிமம் காலவரம்பின்றி ரத்து

Spize உணவகத்தின் ரிவர் வேலி (River Valley) கிளைக்கான உரிமம் கால வரம்பின்றி ரத்துசெய்யப்பட்டுள்ளது.

அந்தக் கிளையின் உணவை உண்ட பிறகு, நச்சுணவு தாக்குதலால் குறைந்தது 49 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டோரில், குறைந்தது 21 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

அந்தச் சம்பவம் தொடர்பான பொதுச் சுகாதாரம் பற்றிய அபாயங்கள் நீங்கும் வரை, உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை நச்சுணவு தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

உணவகத்தைச் சோதித்ததில் சுகாதாரக் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

Top