Images
  • Spize
    (படம்: TODAY)

Spize நச்சுணவுச் சம்பவம்: மாண்டவர் கால அவகாசத்திற்குப் பின் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டிருக்கலாம்


Spize நச்சுணவுச் சம்பவத்தில் மாண்ட துணைக் காவல்படை அதிகாரி குறிக்கப்பட்ட நேரத்திற்குப் பின் உணவைச் சாப்பிட்டது அவருடைய மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அதிகாரியின் மரணம் குறித்து நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் இக்கருத்து முன்வைக்கப்பட்டது.

38 வயது முகமது ஃபத்லி பின் முகமது சாலே (Mohamad Fadli Bin Mohd Saleh) கடந்த ஆண்டு நவம்பர் 14 அன்று இரைப்பை, குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டுப் பின்னர் மரணமடைந்தார்.

Spize உணவகத்தின் உணவைக் குறிக்கப்பட்ட நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ஃபத்லி சாப்பிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அவர் மாண்டதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சைச் சேர்ந்த மூத்த அதிகாரி கூறினார்.

இருப்பினும் குறிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் உணவை உண்டவர்களும் நோய்வாய்ப்பட்டதைக் கருத்திற்கொள்வதாக அவர் கூறினார்.

 

Top