Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பள்ளிகளில் உள்ள விளையாட்டு வசதிகளை நாளை முதல் பொதுமக்கள் பயன்படுத்தலாம்

சிங்கப்பூரின் சில பள்ளிகளில் உள்ள விளையாட்டு வசதிகள் நாளையிலிருந்து (நவம்பர் 21) மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும்.

வாசிப்புநேரம் -
பள்ளிகளில் உள்ள விளையாட்டு வசதிகளை நாளை முதல் பொதுமக்கள் பயன்படுத்தலாம்

(கோப்புப் படம்: FAS)

சிங்கப்பூரின் சில பள்ளிகளில் உள்ள விளையாட்டு வசதிகள் நாளையிலிருந்து (நவம்பர் 21) மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும்.

ஆண்டு இறுதி பள்ளி விடுமுறைக்கால
இரட்டைப் பயன்பாட்டு முறையின் கீழ் அதற்கு அனுமதிக்கப்படுகிறது.

50 திடல்கள், 135 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளின் 119 உள்ளரங்க விளையாட்டு மன்றங்கள் ஆகியவற்றை அடுத்த மாதம் (டிசம்பர்) 27ஆம் தேதி வரை மக்கள் பயன்படுத்தலாம்.

ActiveSG செயலி மூலம், மக்கள் அதற்காக முன்கூட்டியே பதிந்துகொள்ளலாம்.

கிருமித்தொற்றுச் சூழலால், இரட்டைப் பயன்பாட்டு முறை மார்ச்சில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆண்டு இறுதி பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டதால், திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வசதிகளைப் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • SafeEntry பதிந்துகொள்ளுதல்
  • உடல் வெப்பநிலையைச் சரி பார்ப்பது
  • திடல்களில் 2 மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுவது
  • உள்ளரங்கில், கடுமையான உடற்பயிற்சியின்போது 3 மீட்டர் இடைவெளி
  • குழு நடவடிக்கைகளில் அதிகபட்சம் 5 பேர்
  • குழுக்களிடையே 3 மீட்டர் இடைவெளி

ஒரே நேரத்தில், வசதிகளை அதிகபட்சம் 50 பேர் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்